சென்னை;
சென்னையில் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். டாஸ்மாக் ஊழலை கண்டித்து தடையை மீறி கானத்தூரில் உள்ள தனது வீட்டிலிருந்து போராட்டம் நடத்தச் சென்ற அவரை, அக்கரை அருகே போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம். டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளார். முதல் குற்றவாளி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இரண்டாவது குற்றவாளி ஏற்கனவே சிறை சென்ற செந்தில் பாலாஜி. போலீசாரை மதித்து போராட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு ஏற்பாடு செய்தோம். அடுத்த போராட்ட தேதி அறிவிக்கப்படாமல் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொண்டுவர அச்சாரமாக இருக்கும். என்னை பேசவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். நான் பேசினால் டாஸ்மாக் விவகாரத்தில் பல முறைகேடு வெளிவரும் என்பதால் ஆட்சியாளர்களுக்கு அச்சம். இந்தியாவின் நம்பர் ஒன் ஃப்ராடு செந்தில்பாலாஜி” என்றார்.