சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா!!

திருச்சி:
சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சவுபாக்கி யங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.


அதன்படி இந்த ஆண்டுக்கான அம்மனின் பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.

சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினந்தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நை வேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே ‘தளிகை’ என்று என்று சொல்வார்கள்.


ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீர், பானகம், உப்பில் லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது.

அம்மன் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வு டன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் அம்மனை குளிர்விப்பதற்காக கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து பூச்சொரி தல் விழா நடத்துகின்றனர்.

அம்மன் விரதம் இருக்கும் காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூச்சொரிதல் விழா நடக்கிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

இதில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் குழு, குழுவாகப் பிரித்து பூக்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் விதத்தி லும், அவர்களின் பாது காப்பு கருதியும், சன்னதி வீதியின் நுழைவு வாயிலில் இருந்து ராஜகோபுரம் வரை 10 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *