1-ந்தேதி (செவ்வாய்)
- சதுர்த்தி விரதம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் பங்குனி உத்திரம் உற்சவம் ஆரம்பம்.
- மதுரை பிரசன்ன வேங்கடேசர் காலை ராஜாங்க சேவை, இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
- தொட்டியம் காளியம்மன் ரத உற்சவம்.
- கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (புதன்)
- கார்த்திகை விரதம்.
- மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி நவநீதன் சேவை. வெண்ணெய் தாழி சேவை.
- தாயமங்கலம் முத்து மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
- கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (வியாழன்)
- சஷ்டி விரதம்.
- திருச்சுழி சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் பவனி.
- கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் உற்சவம்.
- தாயமங்கலம் முத்து மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
- மேல்நோக்கு நாள்.
4-ந்தேதி (வெள்ளி)
- முகூர்த்த நாள்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையில் ரெங்கமன்னார் சிம்ம வாகனத்தில் பவனி.
- பரமக்குடி அன்னை முத்தாலம்மன் விழா தொடக்கம்.
- கழுகுமலை முருகப் பெருமான் புஷ்பக விமானத்திலும். இரவு அன்ன வாகனத்திலும் பவனி.
- சமநோக்கு நாள்.
5-ந்தேதி (சனி)
- நாங்குநேரி வானமா மலை பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
- பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
- திருக்குற்றாலம் குற்றாலநாதர், பாபநாசம் சிவபெருமான், கோவில்பட்டி பூவணநாதர் தலங்களில் உற்சவம்.
- மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்ஆண்டாள் திருக்கோலம்.
- மேல்நோக்கு நாள்.
6-ந்தேதி (ஞாயிறு)
- ராமநவமி.
- திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்சப சேவை.
- ஒழுகைமங்கலம் மாரியம்மன் விழா தொடக்கம்.
- பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு வரக ரிசி மாலை அணிவித்தல்.
- சமநோக்கு நாள்.
7-ந்தேதி (திங்கள்)
- முகூர்த்த நாள்.
- மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
- பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
- மேல்நோக்கு நாள்.