”40 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு” – முழு விவரம்!!

சென்னை:
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 நள்ளிரவு 12 மணி முதல் 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமா தேவி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது மேலும் நெல்லூர், நாங்குநேரி, செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் – ஆத்தூர், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டரைப் பெரும்புதூர், சாலைபுதூர், செண்பகம் பேட்டை, புதுக்கோட்டை – வாகைகுளம், வாணியம்பாடி, வானகரம், சூரப் பட்டு, திருப்பாச் சேத்தி, பள்ளிக் கொண்டா, எஸ்வி புரம் ஆகிய இடங்களிலும் சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோமீட்டர் தூரம் விரிவான தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன, இதனால் தற்போது தமிழ்நாட்டில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை, சுங்க கட்டணங்கள் 5% முதல் 10% வரை உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தங்களின் படி 1992ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதம் கட்டண உயர்வு உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 40 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக சுற்றறிக்கை அனுப்பியது.

அதன் படி தமிழகத்தில் 78 சுரங்கச் சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவ டிகளுக்கு இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 70 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், இலகு ரக வாகனங்களுக்கு 115 லிருந்து 120 ரூபாயாகவும், பேருந்து மற்றும் லாரிகளுக்கு 245 ரூபாயிலிருந்து 255 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மூன்று அச்சு வாகனங்களுக்கு 265-ல் இருந்து 275 ஆகவும், 4-அச்சு வாகனங்களுக்கு 380-ல் இருந்து 400 ரூபாயாகவும், ஏழு அச்சு வாகனங்களுக்கு 455 – ல் இருந்து 485 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 5-ரூபாய் முதல் 30-ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும் அபாயமும் உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *