சேப்பாக்கம் மைதானம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக விரைவில் மாறிவிடும் சி.எஸ்.கே. – நெட்டிசன்கள் கிண்டல்!!

சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.


கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.


இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் 20 ஓவர்கள் விளையாடிய சி.எஸ்.கே. அணி 51 Dot Ball பந்துகளை ஆடியது. இதன்மூலம் 25,500 மரங்களை நட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியுள்ளது.


இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக விரைவில் மாறிவிடும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *