சென்னை;
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 Dismissals செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.
தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 155 கேட்சுகளையும் 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.