சென்னை
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் கிடையாது, இனியும் இல்லை என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் கிடையாது. இனியும் இல்லை. வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது.
அதிமுக, இஸ்லாமியர்கள் இடையே ஒரு நல்ல உறவு உள்ளது திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. பொதுக்குழு, செயற்குழுவை கூட்டிதான் முடிவு. 2026இல் இபிஎஸ் தனியாகத்தான் ஆட்சி நடத்துவார்; கூட்டணி ஆட்சி கிடையாது.
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். என யாரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இதுவரை நடந்த எந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.