”இந்திய அரசு தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதி அளித்து, அவர்களை காப்பாற்ற வேண்டும்” !! கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பாகிஸ்தானியர்….

சென்னை:
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு விசா மூலம் வந்துள்ள பாகிஸ்தானியர்கள் 2 நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானியர்கள் பலரும் பல நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கு இந்தியாவை நம்பி வருகின்றனர். அவ்வாறாக பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தைகளின் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்.

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்ய உள்ள நேரத்தில் அவர்களை நாட்டை விட்டு வெளியேற கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இதுகுறித்து பேசியுள்ள அந்த பாகிஸ்தான் நபர் “எனது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறக்கும்போதே இதயநோய் இருந்தது. அவர்களின் மருத்துவ உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்துள்ளோம். ஏற்கனவே 1 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துவிட்டோம்.

அடுத்த வாரம் அறுவை சிகிச்சை நடக்க உள்ள நிலையில் எங்களை உடனே பாகிஸ்தானுக்கு திரும்பச் சொல்கிறார்கள்.

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதி அளித்து, அவர்களை காப்பாற்ற வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *