கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது!!

கள்ளக்குறிச்சி;
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகின்ற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து மே மாதம் 13-ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இங்கு கொல்கத்தா, பாம்பே, கேரளா, கர்நாடகா, அமெரிக்கா பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு இருந்து நினைத்த காரியங்கள் கைகூட நேர்த்திக்கடன் செலுத்துவர்.

விழாவில் இரவு தாலி கட்டிக்கொண்டு கோவில் வளாகத்தில் ஒப்பாரி வைத்து ஆடிப்பாடி கும்மியடித்து சந்தோஷமாக இருந்து தேரோட்டத்தின் போது தெய்வநாயக செட்டியார் பந்தலடைய அடைந்த பிறகு தாலி கட்டிய திருநங்கைகள் பக்தர்கள் கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது பூசாரி கையால் தாலி அறுத்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குளித்து வெள்ளை புடவை அணிந்து சோகக் காட்சியுடன் செல்வார்கள்.


தொடர்ந்து 15-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *