நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மாம்பழம்!!

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளில் மாம்பழம் முக்கியமான ஒன்று. வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான். எனவே இது ‘பழங்களின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது.

உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது.
அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த மாம்பழம் உதவுகிறது. இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது.

மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடைக்காலங்களில் இயற்கை தரும் பழங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒன்று மாம்பழம் ஆகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *