பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர், “எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது” என்று தெரிவித்ததாக கூறினார்