மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என்று ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
வைகோவிற்கு சென்னையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .
கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. வைகோ அவர்கள் விரைவில்…
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது.

வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.