சென்னை:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா. இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.
இந்நிலையில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற கையோடு ஓய்வு அறிவித்தது குறித்து ரோகித் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
பத்திரிகையாளர் விமல் குமாரிடம் இது தொடர்பாக பேசிய ரோகித், “டி20 உலகக்கோப்பையை நாங்கள் வெல்லவில்லை என்றால் நான் ஓய்வு அறிவித்திருப்பேன். இதனையடுத்து நான் விளையாடுவது சரியாக இருக்காது.
அடுத்தவர்களுக்கு நான் வழிவிட்டாக வேண்டும். ஆனால் நாங்கள் கோப்பையை வென்றோம். நான் நன்றாக விளையாடினேன்.
ஓய்வு பெறுவது குறித்து எதையும் முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற நான் திட்டமிடவில்லை.
உண்மையில், கோப்பையை வென்ற பிறகு, நீங்கள் இன்னும் அதிகமாக விளையாட முடியும் என்று நீங்கள் உணர்கிறீர்கள், ஆனால், டி20களுக்கு நன்றி சொல்ல இதுவே சரியான நேரம் என்று நான் நினைத்தேன்” என்று தெரிவித்தார்.