உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 30 பந்தில் 63 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசப் பதான், சால்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் 55 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 111 ரன்னில் 9 விக்கெட்டுகளை இழந்தது. யுவராஜ் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பின்னி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆரோன் ஃபாங்கிசோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.