“எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன” – தோனி!!

சென்னை:

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, “எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன்.

ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை. கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, “வைபவ் சூர்யவன்ஷி உங்கள் காலைத் தொட்டு வணங்கியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த தோனி, “வயதாகிவிட்டதைப் போல உணர்ந்தேன்.

எங்கள் அணி வீரர் ஆண்ரே சித்தார்த்திடம், உனக்கு என்ன வயது? எனக் கேட்டேன். அவர் என்னை விட 25 வயது இளையவராம். இதைக் கேட்டபோதுதான் ‘ஆம் நமக்கு நிஜமாகவே வயதாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *