குஜராத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடுஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் – பிரதமர் மோடி !!

குஜராத்
குஜராத்தின் டஹோட் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்க பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் சென்றார். தனது சுற்றுப் பயணத்தின் போது 4 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார்.

மோடியின் முதல் ரோடு ஷோ நிகழ்ச்சி வதோதராவில் இன்று காலை நடை பெற்றது. அவர் 1 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோவாக சென்றார். காரின் கதவை திறந்து வைத்து அதில் நின்றபடி பயணம் செய்தார்.


அப்போது சாலையின் இருபுறமும் கூடி நின்ற பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர் தூவினார்கள். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பெண்கள் உற்சாகமாக வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கர்னல் சோபியா குரேஷி முக்கிய பங்கு வகித்தார். அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

அவரது பெற்றோர், சகோதரர் முகமது சஞ்சய் குரேஷி, சகோதரி ஷைனா சன்சாரா ஆகியோர் வரவேற்பில் பங்கேற்றனர். மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் தேசியக்கொடியுடன் காணப்பட்டனர். பொதுமக்களை பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தபடியே சென்றார்.

மாலை 3.30 மணிக்கு பூஜ் பகுதியில் ரோடு ஷோ செல்கிறார். அதற்கடுத்து, இரவு 7.45 மணிக்கு பிரதமர் மோடி அகமதாபாத்தில் ரோடு ஷோ செல்கிறார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திரா பாலம் வரை சுமார் 3 கி.மீ தூரத்துக்கு அவர் ரோடு ஷோ செல்கிறார். பின்னர் நாளை காலை 10.30 மணிக்கு காந்திநகரில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடுஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *