சென்னை:
நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியப்பின் தமிழ்நாட்டு வீரர் குகேஷ் கொடுத்த ரியாக் ஷன் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
அப்போது தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் கார்ல்சன் செஸ் பலகையை ஓங்கி அடித்தார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் குகேஷ் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.
இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.