ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க இருப்பதாக தகவல் !!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது.

அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்கும் 171 ஆவது படத்திற்கு “கூலி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தங்க கடத்தல் சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *