சென்னை ;
முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் பார்லே- ஜி பிஸ்கட் தொடர்பான தனது சுவையான நினைவுகளை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ஹெக்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்,”சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பதை போல உணரவைக்கும். அதில் ஒன்று தான், பார்லே- ஜி பிஸ்கட்டை டீ-யில் நனைத்து சாப்பிடுவது” என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.