சென்னை ;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் கணேஷ் இயக்கும் கராத்தே பாபு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இவரது விவாகரத்து வழக்கு சமீபத்தில் பேசும் பொருளாக அமைந்தது.
இந்நிலையில் ரவி மோகன் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ப்ரோகோட் என்ற பெயரை வைத்துள்ளனர்.எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் யோகி இதற்கு முன் சந்தானம் நடித்த டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இப்படமும் காமெடி கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இப்படத்தை ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
அனிமல் மற்றும் அர்ஜுன் ரெட்டி திரைப்படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் 4 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
படத்தொகுப்பை பிரதீப் இ ராகவ் மேற்கொள்ள படத்தின் ஒளிப்பதிவை போர் தொழில் புகழ் கலைசெல்வன் செய்கிறார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.