சென்னை
சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் , டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மின்சார வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 2024ம் ஆண்டில் மட்டும் மின்சார வானங்களின் விற்பனை எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் மின்சார வானங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் போதிய அளவில் இல்லாததால் , மக்கள் மின்சார கார்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு
7) மெரினா கடற்கரை பார்க்கிங்
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா