“ஜல்​லிக்​கட்டு போட்​டிக்​காக வசூல் வேட்டை நடத்​தி​ய​தாக என் மீது தெரிவிக்​கப்​படும் புகார்​கள் முற்​றி​லும் பொய் – தளபதி முருகேசன்!!

கோவை;
கோவையில் கடந்த ஏப்ரல் 27-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அன்றைய தினம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி வரவில்லை.

அப்போது இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிறுத்தி திமுக-வினர் நடத்திய தடாலடி வசூல் வேட்டை தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த உதயநிதி வரவில்லை என இப்போது செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

கோவை செட்​டிப்​பாளை​யத்​தில் ஏப்​ரல் 27-ம் தேதி மாவட்ட நிர்​வாக​மும் தமி​ழர் பண்​பாட்டு ஜல்​லிக்​கட்​டுப் பேர​வை​யும் இணைந்து ஜல்​லிக்​கட்டு போட்​டிகளை பிரம்​மாண்​ட​மாக நடத்​தின. முன்​னாள் அமைச்​சர் செந்​தில்பாலாஜி தான் போட்​டியை தொடங்கி வைத்​தார்.

தமி​ழர் பண்​பாட்டு ஜல்​லிக்​கட்​டுப் பேரவை தலை​வ​ரும், கோவை தெற்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரு​மான தளபதி முருகேசன் தான் இதற்​கான முழு ஏற்​பாடு​களை​யும் செய்​தார். இந்த நிலை​யில், ஜல்​லிக்​கட்​டுப் போட்​டிகளுக்​காக வசூல் வேட்டை நடத்​தி​ய​தாக இப்​போது இவரைச் சுற்​றித்​தான் சர்ச்சை வெடித்​திருக்​கிறது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திமுக-​வினர் சிலர், “ஜல்​லிக்​கட்​டுப் போட்​டிகளை தடபுடலாக ஏற்​பாடு செய்த தளபதி முரு​கேசன், கார், பைக் என விலை​ம​திப்பு மிக்க பரிசுகளை​யும் அறி​வித்​திருந்​தார். இதற்​கெல்​லாம் பணம் வேண்​டுமே… அதற்​காக கோவை​யில் உள்ள பன்​னாட்டு நிறு​வனங்​கள் உள்பட பல இடங்​களில் டார்​கெட் வைத்து வசூல் வேட்டை நடத்தி இருக்​கி​றார்​கள்.

தொழில்​துறை​யினரிட​மும் பெரும் தொகை வசூலாகி இருக்​கிறது. ஜல்​லிக்​கட்டு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்​சி​யில் உதயநிதி கலந்​து​கொள்​வ​தாக அவரது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்​றாலும் அன்​றைய தினம் கோவை​யில் அவர் வேறு சில நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வ​தால் ஜல்​லிக்​கட்​டுப் பரிசளிப்பு நிகழ்​விலும் பங்​கேற்​பார் என்று சொன்​னார்​கள்.

இதனிடையே, வசூல் நெருக்​கடிகளால் அவதிக்​குள்​ளான பெரு நிறு​வனங்​கள் சில, தங்​களின் வசூல் சங்​கடங்​களை மேலிடம் வரைக்​கும் கொண்டு போய்​விட்​டன. இதனால், ஜல்​லிக்​கட்​டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்​சிக்கு வரா​மலேயே போய்​விட்​டார் உதயநி​தி” என்​றார்​கள். தளபதி முரு​கேசனின் திடீர் வளர்ச்சி குறித்து பேசிய இன்​னும் சில திமுக புள்​ளி​களோ, “காங்​கிரஸில் இருந்து திமுக-வுக்கு வந்த தளபதி முரு​கேசன் மிகக் குறுகிய காலத்​தில் மாவட்​டச் செய​லா​ள​ராக வரக் காரணமே செந்​தில்​பாலாஜி தான்.

கரூரில் பிரபல​மாக இருக்​கும் ஒரு ‘மெஸ்’ உரிமை​யாள​ருக்கு நெருக்​க​மாக இருப்​பவர் தளபதி முரு​கேசன். அவர் சிபாரிசு செய்​த​தால் தான் முரு​கேசனை தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் பதவி​யில் செந்​தில்​பாலாஜி அமர​வைத்​தார்.

பொறுப்​புக்கு வந்​தது முதலே தன்னை வளப்​படுத்​திக் கொள்​வ​தில் கவன​மாக இருக்​கும் தளபதி முரு​கேசன், கட்​சிப் பதவி​கள், அறநிலை​யத்​துறை நியமனங்​கள் உள்​ளிட்​ட​வற்​றில், இஷ்டத்​துக்கு புகுந்து விளை​யாடு​கி​றார். மொத்​தத்​தில், திமுக-வை வைத்து மிகக் குறுகிய காலத்​தில் அசுர வளர்ச்சி கண்​டிருக்​கி​றார்” என்​கி​றார்​கள்.

தளபதி முருகேசன்
இந்​தப் புகார்​கள் குறித்து தளபதி முரு​கேசனிடம் கேட்​டதற்​கு, “ஜல்​லிக்​கட்டு போட்​டிக்​காக வசூல் வேட்டை நடத்​தி​ய​தாக என் மீது தெரிவிக்​கப்​படும் புகார்​கள் முற்​றி​லும் பொய். கோவை ஜல்​லிக்​கட்டு நிறைவு விழா​வில் கலந்து கொள்ள துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினுக்கு அழைப்பு விடுக்​கப்​பட​வில்​லை.

ஆனாலும், விழா மிக சிறப்​பாக நடத்​தப்​பட்​ட​தாக கேள்​விப்​பட்டு என்னை அழைத்து உதயநிதி வெகு​வாகப் பாராட்​டி​னார். கட்​சிக்​காக நான் ஆற்றி வரும் சீரிய பணி​கள் குறித்து தலை​மைக்கு தெரி​யும். எதிர்​வ​ரும் காலத்​தில் அதற்​கான உரிய அங்​கீ​காரத்தை தலைமை எனக்கு வழங்​கும். எனவே என் மீது புகார் தெரி​விப்​பவர்​களுக்கு நான் கூறும் பதில், வெயிட் அண்ட் ஸீ என்​பது தான்” என்​றார்.

மாவட்​டச் செய​லா​ள​ராக இருக்​கும் தளபதி முரு​கேசன், அடுத்து எம்​எல்ஏ, அமைச்​சர் என்ற கனவில் இருக்​கி​றார்.

அந்​தக் கனவு​களை தகர்க்​கும் வித​மாக அவரது வளர்ச்​சியை பிடிக்​காதவர்​கள் வசூல் வேட்டை விவ​காரத்தை பூதாகர​மாக்​கு​வ​தாக​வும் இன்​னொரு தரப்பு சொல்​கிறது. எது உண்​மையோ… மொத்​தத்​தில் கோவை​யில் தொழில் துறை​யினரும் பன்​னாட்டு நிறு​வனங்​களும் ஒரு​வித​மான் அதிருப்​தியில் இருக்​கிறார்​கள்!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *