ஐஐடியில் பயில உள்ள மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய விஜய்!!

மாமல்லபுரம்:
தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி​யில் 10 மற்​றும் 12ம் வகுப்பு தேர்​வில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்று தேர்ச்​சி​யடைந்த மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில், கல்வி விருது வழங்​கும் விழா, இறுதி கட்​ட​மாக மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​கள் தங்​களின் பெற்​றோர்​களு​டன் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சி​யில் தவெக.தலை​வர் விஜய் பங்​கேற்​றார்.

விழாவில், சேலம் மாவட்​டம், கரு​மந்​துறை பகு​தியை சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பழங்​குடி​யினர் சமு​தா​யத்தை சேர்ந்த மாண​வி​ மின்​சார இணைப்பு இல்​லாத தன்​னுடைய வீட்​டில், மெழுகு​வர்த்தி வெளிச்​சத்​தில் படித்தது குறித்து கூறினார்.

மேலும், தற்​போது ஐஐடியில் கல்வி பயில உள்​ளதாக​வும், விஞ்​ஞானி​யாக ஆக வேண்டும் என மாணவி விருப்​பம் தெரிவித்தார். அந்த மாணவியிடம், விஞ்ஞானியாகும் உங்களது கனவு நிறை வேறும் என விஜய் வாழ்த்து தெரி​வித்து, ரூ.2 லட்​சம் மதிப்​பிலான காசோலையை வழங்​கி​னார்.

இதையடுத்​து, 39 தொகு​தி​களில் சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற 234 மாணவ, மாணவி​களுக்கு பாராட்டு சான்​றுகள் மற்​றும் ரூ.5 ஆயிரத்​துக்​கான காசோலைகளை வழங்கி பாராட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், தேர்​தல் பிரிவு மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜூனா மற்​றும் மாணவ, மாணவி​கள், பெற்​றோர்​கள் உள்பட பலர் கலந்​துக் கொண்​டனர்.

நலத்​திட்ட உதவி: தவெக தலை​வர் விஜய்​யின் 51-வது பிறந்​த​நாள், வரும் 22-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, சென்னை தெற்கு மாவட்ட தவெக சார்​பில் தி.நகரில் நலத்​திட்ட உதவி வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது.

விழா​வில், 5 மாற்​றுத் திற​னாளி​களுக்கு மூன்று சக்கர சைக்​கிள், 51 மாணவர்​களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 51 பெண்​களுக்கு சுயதொழில் தொடங்க தையல் இயந்​திரம், 51 தூய்மை பணி​யாளர்​களுக்கு ரூ.2,500 மதிப்​பிலான மளிகை தொகுப்​பு ஆகிய​வற்றை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் ஆனந்த் வழங்​கி​னார்.

நிகழ்​வில், மாவட்​டச் செய​லா​ளர் க.அப்​புனு என்ற வேல்முருகன் உள்​ளிட்​ட பலர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *