சென்னை
சென்னை தாம்பரத்தில் தேசிய சித்தா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “யோகா என்பது உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் முழுமையான பயிற்சி. இந்தியாவில் தோன்றிய தொன்மையான கலையான யோகா, இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுவது மிகுந்த பெருமையளிக்கிறது.
தோல்வி பயத்தால் கீழடி, தொகுதி மறுசீரமைப்பு என திமுக அரசியல் செய்கிறது. தோல்வி பயத்தில் இருந்து வெளியேற இந்தி, நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை திமுக எடுக்கிறது.
மக்கள் தெளிவாக இருப்பதால் திமுகவின் செயலுக்கு ஆதரவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி அமித்சாவின் பயணம் தொடர்ச்சியாக இருக்கும். மதுரை மாநாடு நடக்கும் முன்பே லட்சக்கணக்கானவர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.