“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார்” என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகரின் குடும்பத்தாருடன் புகைப்படக் காட்சி நடைபெற உள்ளது என்று வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார் என்ற செய்தி தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அன்புள்ள அனைவருக்கும், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார்” என்று சமூக ஊடகங்களில் செஞ்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரசிகர்கள் உள்ள WhatsApp தளத்தில் நேற்று பகிர்ந்து உள்ளார், இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும்.
பகிர்வதற்கு முன், தகவலின் நம்பகத்தன்மையை தயவுசெய்து சரி பார்க்குமாறு அவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
8 மேலும் தலைவரின் அனுமதி இல்லாமல் இது போன்ற செய்தியை பகிர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.