ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு!!

அமராவதி,
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.


ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா (55) மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

சிங்கையாவை போலீசாரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரவாளர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் குண்டூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

முதலில், ஜெகன் கான்வாயில் ஒரு வாகனத்தில் ஏறி விழுந்ததால் சிங்கையா காயமடைந்ததாகக் கருதப்பட்டது, ஆனால், ஜெகன் பயணித்த வாகனத்தின் அடியில் அவர் நசுங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள். சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *