‘திண்டுக்கல் டிராகன்ஸ்’ அணியின் கேப்டன் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தியை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால்!!

திண்டுக்கல்;
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழனஸ் அணிகள் முதல் பிளே ஆப் சுற்றிலும் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் ௨ ஆவது பிளே ஆப் சுற்றிலும் மோதவுள்ளன.

இந்நிலையில், ‘திண்டுக்கல் டிராகன்ஸ்’ அணியின் கேப்டன் அஷ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தியை நடிகர் விஷ்ணு விஷால் சந்தித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரோமஷனுக்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.


இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *