டோக்கியோ:
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான கோஃல்ப் போட்டியில் இந்தியாவின் திக்ஷா தாகர் தங்கப் பதக்கம் வென்றார்.
2017ம் ஆண்டு டெஃப் ஒலிம்பிக்ஸில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியின் போது வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த திக்ஷா தற்போது தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 50 மீட்டர் புரோன் ரைபிள் பிரிவில் இந்தியாவின் மஹித் சாந்து 246.1 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
செக் குடியரசின் எலிஸ்கா ஸ்வோபோடோவா 247.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். நடப்பு டெஃப்ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா இதுவரை துப்பாக்கி சுடுதலில் மட்டும் 12 பதக்கங்கள் வென்றுள்ளது.
இதில் மஹித் சாந்து வென்ற 3 பதக்கங்களும் அடங்கும். அவர், 10 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவில் தங்கமும், 10 மீட்டர் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.