அதிக கோல்கள் அடித்து Golden Boot- ஐ வென்ற எர்லிங் ஹாலண்ட்!!

பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியின் வெற்றி மூலம் மென்செஸ்ட்டர் சிட் அணியும் 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

இதனிடையே, பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து Golden Boot- ஐ வென்றுள்ளார் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட். இத்தொடரில் மொத்தம் 27 கோல் அடித்துள்ளார். கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *