சென்னை:
பாமக மாநில செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், கட்சி மற்றும் நிறுவனத் தலைவருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பட்டை மீறி செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ராமதாஸுக்கு செயற்குழு அதிகாரம் அளித்துள்ளது.
பொதுவெளியில் கட்சிக்கு மட்டும் கலங்கம் விளைவிக்காமல் ராமதாஸிக்கும் களங்கம் விளைவித்தாதகவும், பாமக எம்.எல்.ஏ அருளை நீக்கியது , எந்த வித அதிகாரமும் இல்லாத செயல்தலைவரின் செயல் மிகவும் மோசமானது என்றும், நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலி யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.