நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை,
நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘போக்கிரி, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்ளிட்ட படங்களில் வடிவேலு உடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் பிரபலம்.

இவர் தனது மகளின் திருமணத்துக்காக கடந்த சில நாட்களாக தமிழின் முன்னணி நடிகர்கள் தொடங்கி துணை நடிகர்கள் வரை பலருக்கும் அழைப்பிதழ் வைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற கிங் காங் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். உடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கிங் காங் மகள் வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *