சென்னை;
நடிகர் அஜித்தும் – நடிகை ஷாலினியும் நேற்று தனது 25வது திருமண ஆண்டை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், இன்று அந்த ஜோடி ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கோ, திருமண நிகழ்வுகளுக்கோ கூட செல்லாத நடிகர் அஜித், பல வருடங்களுக்கு பின் பொதுவெளியில் தலை காட்டியுள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அவரை முதன்முறையாக மைதானத்தில் கண்ட ரசிகர்கள், போட்டியை கண்டு களிக்காது, தல தல கோஷம் எழுப்பினர்.
அஜித்துடன் அவருடைய மனைவி ஷாலினி, ஆத்விக், அனுஷ்கா, ரிச்சர்ட் ஆகியோரும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தனர்.
பில்லா பட பாணியில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து ஸ்டைலாக மாஸாக அஜித்குமார் மைதானத்தில் என்ட்ரி கொடுத்தார்.
அஜித்துடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து போட்டியை ரசித்து பார்த்தார். சிவகார்த்தியேனும் அவரது மனைவி ஆர்த்தியோடு வந்திருந்தார்.