சென்னை:
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.
இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்தது. பாம்ப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
டைட்டில் டீசர் மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் டைட்டில் டீசர் யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.