‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.

அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்னும் புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தபடுகின்றன.

அதன்படி, நகர்புற பகுதியளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படுகின்றன. நாளை (ஜூலை 15) தொடங்கும் இந்த முகாம்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களிலேயே இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை பெறுவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தகுதியுடைய மற்றும் விடுபட்ட பெண்கள் இந்த முகாம்களுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை கடலூர் சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக இன்று (ஜூலை 14) தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.

அங்கு திமுக நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புதன்கிழமை அன்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *