சென்னை:
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
கர்ம வீரர், பெருந்தலைவர், கல்வி கண் திறந்தவர் என போற்றப்படும் முன்னாள் முதலமைச்சர் காமராசரின் பிறந்தநாள், இன்று ( ஜூலை 15) கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1954 முதல் 1963 வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த காமராசர், கல்விக்காக எண்ணற்ற தொண்டுகளை ஆற்றியுள்ளார்.
அனைவரும் பள்ளி வந்து படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்டாய கல்வியை கொண்டு வந்த காமராசர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப் படுத்தினார்.
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதற்காக சீரூடை வழக்கத்தைக் கொண்டு வந்தார்.
இவ்வாறு கல்விக்காக பாடுபட்ட காமராசரின் பிறந்தநாளை, கடந்த 2006ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ‘கல்வி வளர்ச்சி’ நாளாக கொண்டாடி வருகிறது.
இன்று காமராசரின் பிறந்தநாளையொட்டி தலைவர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காமராசரின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்..