தமிழக முதலமைச்சர் எந்த பண்டிகளுக்கும் எந்த மத நல்லிணக்க அடிப்படையில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லையே ஏன் ?என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தென்சென்னை பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , முத்திரை பதிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு ஏதும் கொண்டு வரவில்லை என்று கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் பதிலடி.
தமிழகத்தின் உரிமையை தொடர்ந்து வஞ்சிக்கின்ற அரசாக பாஜக உள்ளது என்றும் மத நல்லிணக்கத்தை ஒழித்து முற்றிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி என்றாகிவிடும் என்று கூறுகிறார் மா.சுப்பிரமணியன்…
மத நல்லிணக்கத்தை மாண்புமிகு பாரதப் பிரதமரும் பேணிக்காக்கிறார்கள் நாங்களும் பேணிக்காக்கிறோம்.
தமிழக முதலமைச்சர் பெரும்பான்மையான மக்கள் வாக்களார்களாக இருக்கும் இந்த நாட்டில்
விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை,தீபாவளி பண்டிகை போன்ற எந்த பண்டிகளுக்கும் எந்த மத நல்லிணக்க அடிப்படையில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லையே ஏன் ?
தமிழக முதலமைச்சர் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறாராம் புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறாராம்?
தமிழக முதலமைச்சர் 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்…
பாரதப் பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டத்தை ஏதும் கூற முடியுமா என்று கேட்கிறார் மா.சுப்பிரமணியம்…
இவர் தூக்கத்தில் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை…
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் 100-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்…
இவர்கள் வருடத்திற்கு பெண்களுக்கு 1 லட்சம் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.
ஆனால் பெண்கள் மாதத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு தொழில் முனைவோர்களாக ஆக்குவதற்காக முத்ரா வங்கி கடன் திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ஸ்டார்ட் அப்- கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.ஏறக்குறைய 30 ஆயிரம் ஸ்டார்ட் அப் -கள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளது.
28500 கோடி முத்துரா வங்கி கடன் அளிக்கப்பட்டுள்ளது இதில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா என்ற இலவச சமையல் எரிவாயு திட்டத்தினால் பத்து கோடி ஏழை தாய்மார்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக பாரதப் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்த மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீடு கொடுக்கப்படுகிறது.
பென்ஷன் காரர்கள் மாதந்தோறும் தனது மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு பாரதப்பிரதமரின் மக்கள் மருந்தகம் செயல்படுகிறது.
இன்று வீடு வீடாக தண்ணீர் வருகிறது என்றால் அதற்கு பாரத பிரதமரின் திட்டம்தான் காரணம்.
நெடுஞ்சாலை வசதி வந்தே பாரத் ரயில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் நம் பாரதப் பிரதமர்.
மக்களுக்கு எந்த வித இடையூறு இல்லாமல் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க முடியாத தமிழக அரசு மத்திய அரசை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி விமான நிலையத்தை சீரமைத்து தென் தமிழக மக்கள் இலகுவாக பணிக்கு செல்வதற்கும் தென் தமிழக பொருளாதார வளர்வதற்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை விமான நிலையம் பல கோடி ரூபாயில் விரிவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை 20% அதிகரித்துள்ளது.
ஆனால் இவர்கள் ஒரு விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை இன்னும் கூட பிரச்சனை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் கூட இவர்கள் ஆறு வழிச்சாலையை எதிர்க்கட்சியாக இருக்கும் போது வேண்டாம் என்று கூறினார்கள்.அதை செயல்படுத்திருந்தால் 7 மாவட்டங்கள் பயனடந்திருக்கும்.
ஆனால் இன்று அவர்கள் ஆட்சி அமைந்த உடன் அத்திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள்.
நீட் தேர்வும் அதேபோன்றுதான் 14-லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வை எழுத ஆரம்பித்துள்ளார்கள்.ஆனால் நீட் தேர்வு பற்றிய அவநம்பிக்கையை மாணவர்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
காலை உணவு திட்டத்தை கொண்டு வருகிறோம் என்கிறார்கள்.ஆனால் தரமான கல்வியோடு காலை உணவு அளிப்பதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டம்.
அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
போக்குவரத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறி இ-பேருந்துகள் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் ஓட ஆரம்பித்துவிட்டது.புதுச்சேரியிலும் கூட 25 இ-பேருந்துகள் ஓட ஆரம்பித்து விட்டது.
ஆனால் இங்கு ஆரம்பிக்கப்படவில்லை…
தென்சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.