ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதாக கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான செவிலியர் நிமிஷா பிரியா. கடந்த 2008ம் ஆண்டுக்கு ஏமன் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். தலைநகர் சனாவில் , தலால் அப்து மஹதி என்பவருடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இதில் போதிய வருமானம் இல்லாதபோது, நிமிஷாவின் நகைகள், மருத்துமனையின் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அப்து மஹதி கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
இதனால் அவரிடம் இருந்து தனது உடைமைகளை பெறுவதற்காக கடந்த 2017ம் ஆண்டு மஹதிக்கு, மயக்கமருத்து செலுத்தியிருக்கிறார். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதால், மஹதி உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு, கடந்த 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தும் பொறுட்டு அவரது குடும்பத்தினர் , மத்திய அரசிடம் வலியுறுத்திய நிலையில், அதனை எற்று அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்த பலனும் எட்டப்படவில்லை.
அப்போது ஏமன் சட்ட விதிகளின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் இழப்பீட்டுத் தொகயை ஏற்றுக்கொண்டார் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் நிமிஷாவின் குடும்பத்தினர் பொதுமக்காளுடன் சேர்ந்து ரூ. 8.60 கோடி வரை திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதேநேரம் கேரளாவில் மிகவும் செல்வாக்கு பெற்ற சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் ஏமன் அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பலனாக கடந்த 16ம் தேதி நிறைவேற்றப்பட இருந்த நிமிஷாவின் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது.