கட்சி சில நேரம் நமது உழைப்பை அங்​கீகரிக்​காமல் விட்​டாலும், நாம் கட்​சியை கைவி​டா​மல் உழைக்க வேண்​டும் – மல்லிகார்ஜுன கார்கே !!

பெங்களூரு:
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 1999-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான் கட்சியை வழிநடத்தினேன்.

காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன்.

அதன் காரணமாக காங்கிரஸ் கர்நாடகாவில் உள்ள 224 இடங்களில் 132 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என பத்திரிகைகள் எழுதின.

ஆனால் தேர்தலுக்கு வெறும் 4 மாதங்​களுக்கு முன்பு கட்​சி​யில் சேர்ந்த எஸ்​.எம்​. கிருஷ்ணாவுக்கு முதல்​வர் பதவியை வழங்​கினர்.

எனக்கு கிடைக்க வேண்​டிய முதல்​வர் பதவியை தராமல் ஏமாற்றி விட்​டார்​கள். அதன் பிறகு பலமுறை எனது முதல்​வர் கனவை தடுத்​து​விட்​டனர். ஆனாலும் கட்​சி​யின் நலனுக்​காக தளராமல் பணி​யாற்​றினேன்.

அதனால் அகில இந்​திய அளவில் காங்​கிரஸின் தலை​வ​ராக உயரும் வாய்ப்பு எனக்கு கிடைத்​தது. கட்சி சில நேரம் நமது உழைப்பை அங்​கீகரிக்​காமல் விட்​டாலும், நாம் கட்​சியை கைவி​டா​மல் உழைக்க வேண்​டும்.

இவ்​வாறு மல்​லி​கார்​ஜுன கார்கே தெரி​வித்​தார். அவரது இந்த பேச்​சு, காங்​கிரஸ் மேலிடத்தை அதிர்ச்​சிக்கு உள்​ளாக்கி இருப்​ப​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *