சென்னை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை சென்னை அணி சந்தோசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, “அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்” என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அதற்கு அவர் பெயர் S-ல் தொடங்குமா?
என்று சக வர்ணனையாளர் சோப்ரா, கிரிக்கெட் கேட்க, அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சுரேஷ் ரெய்னா சிரித்தபடியே பதில் கூறினார்.