சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார் – அமைச்சர் தகவல்!!

சென்னை:
சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.40.5 கோடி​யில் தீவிர சிகிச்​சைப் பிரிவு கட்​டிடத்​துக்கு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஆகியோர் நேற்று அடிக்​கல் நாட்​டினர்.

தொடர்ந்​து, ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்டு விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரவுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்​புயர்வு மையம் கட்டு​மான பணி​யினை ஆய்வு செய்​தனர். மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: இந்த மருத்​து​வ​மனை​யில் இடைநிலை பராமரிப்புமையம், காந்த சக்தி மூலம் மூளை​யைத் தூண்​டும் நவீன சிகிச்சை ஆகிய​வற்றை முதல்​வர் ஏற்​கெனவே தொடங்கி வைத்​துள்​ளார்.

ரூ.42 கோடி செல​வில் மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்​புயர்வு மையம் கட்​டு​வதற்கு முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​யிருந்​தார்.

கட்​டிடப் பணி​கள் முடிவடைந்த நிலை​யில் மருத்​துவ உபகரணங்​கள் கொள்​முதல் செய்​யும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்த மைய கட்​டிடத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார்.

இந்த மருத்​து​வ​மனை​யில் ஏற்​கெனவே ரூ.4.62 கோடி​யில் பாரம்​பரிய கட்​டிட​மாகக் கருதப்​பட்ட மனமகிழ் மன்​ற கட்​டிடம் புனரமைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக மனநோ​யாளர்​களுக்கு காப்​பீட்டு திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. 850-க்​கும் மேற்​பட்ட மருத்​துவ பயனாளர்​களுக்கு முதலமைச்​சரின் விரி​வான மருத்​துவ காப்​பீட்டு திட்​டம் பயன்​பாட்​டில் உள்​ளது.

மருத்​து​வக் கட்​டமைப்பை மேம்​படுத்​தும் முயற்​சி​யாக 100 தீவிர சிகிச்சை பிரிவுக்​கான மருத்​து​வக் கட்​டிடம், 220 மற்ற சாதாரண படுக்கை வசதி​கள் கொண்ட கட்​டிடம் என்று 330 படுக்கை வசதி​கள் கொண்ட 3 பிளாக்​கு​கள் கட்​டும் பணி தற்​போது தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தப் பணி​கள் முடிவுற்ற பிறகு இந்த மருத்​து​வ​மனை​யில் மட்​டும் 570 படுக்கை வசதி​களோடு புதிய கட்​டிடத்​திலேயே மருத்​துவ பயனாளர்​கள் பயன் பெறு​வார்​கள்.

‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்ட முகாம் தொடங்​கப்​பட்ட ஒரே நாளில் 38 மாவட்​டங்​களில் 44,418 பேர் பயன்​பெற்று இருக்​கிறார்​கள். வரும் சனிக்​கிழமை 37 மாவட்​டங்​களில் நடத்​தப்பட உள்​ளது.

388 வட்டாரங்​களுக்கு தலா 3 என்ற வகை​யிலும், 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட 5 மாநக​ராட்​சிகளில் தலா 4 என்ற வகை​யிலும், 10 லட்​சத்​துக்​கும் குறை​வான 19 மாநக​ராட்​சிகளில் தலா 3 என்ற வகை​யிலும் 1,256 மு​காம்​கள் நடத்​தப்பட உள்​ளன.

வாரத்​துக்கு 38 மு​காம்​கள் என 6 மாதங்​களுக்​குள்​ நடத்​தப்​படும்​. இவ்​வாறு அமைச்​சர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *