சென்னை;
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலினுடன் சென்று மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து தன் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து இருவரும் ஆசி பெற்றனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்!
அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!
எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.