நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது.
2வது செட்டை இகா ஸ்வியாடெக் ஜோடி 7-5 என வென்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 10-6 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.