செங்​கல்​பட்டு அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கு, பணிக்கு செல்​லும் போது அரசு பேருந்து மோதி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் குடும்​பத்​துக்கு நிவாரணத் தொகை​யாக, ரூ.1 கோடி வழங்க வேண்​டும் – மருத்துவர்கள் கோரிக்கை!!

சென்னை:
செங்​கல்​பட்டு அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கு, பணிக்கு செல்​லும் போது அரசு பேருந்து மோதி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் குடும்​பத்​துக்கு நிவாரணத் தொகை​யாக, ரூ.1 கோடி வழங்க வேண்​டும் என, தமிழக முதல்​வருக்​கு, அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பணிபுரிந்து வந்​தவர், பச்​சிளம் குழந்தை சிறப்பு மருத்​து​வர் மணிக்குமார். கடந்த 18-ம்தேதி சாலை விபத்​தில் உயி​ரிழந்​தார். அவருடன் சென்ற மற்​றொரு மருத்​து​வர் படு​கா​யம் அடைந்​தார்.

இந்​நிலை​யில், பணி​யின்​போது போலீ​ஸார் இறந்​தால் உடனடி​யாக ரூ.1 கோடி வழங்​கு​வதை​போல், உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் மணிக்​கு​மார் குடும்​பத்​துக்​கும் ரூ.1 கோடி வழங்க வேண்​டும் என்று அரசு மருத்​து​வர்​கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்​து, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை கூறிய​தாவது: அரசுப் பணி​யில் நேர்​மை​யாக, அர்ப்​பணிப்​போடு பணிபுரிந்து வந்​தவர் மருத்​து​வர் மணிக்​கு​மார். அவரது உடல், மருத்​து​வ​மனைக்கே தானம் செய்​யப்​பட்​டுள்​ளது. அவரது மறைவு என்​பது அந்த குடும்​பத்​துக்கு ஈடு செய்ய முடி​யாத மிகப்​பெரிய இழப்பாகும்.

முதல்வரே நிவாரணம் அறிவிப்பு: பொது​வாக, மற்ற துறை​களில் இது​போன்று யாராவது உயி​ரிழந்​தால் தமிழக முதல்​வரே, உடனடி​யாக நிவாரண அறி​விப்பு வெளி​யிடு​வதை பார்க்​கிறோம்.

அதே​போல், அரசுப் பேருந்து மோதி உயி​ரிழந்த மருத்​து​வர் மணிக்​கு​மாரின் குடும்​பத்​துக்​கும் ரூ.1 கோடி நிவாரணம் மற்​றும் இழப்​பீடு வழங்க முதல்​வர் உத்​தர​விட வேண்​டும். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்​து​வர் பிர​வீனுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *