மகளிர் உரிமைத்தொகை – விண்ணப்பப் படிவம் வெளியீடு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2.30 லட்சம் பெண்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் உரிமைத் தொகை : 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு.. முக்கிய பணி 6ம் தேதி தொடக்கம்..
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த மாதம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் ரேசன் கடை வாயிலாக பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக 2.30 லட்சம் பேர் வரை இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக திருமணம் ஆன பெண்கள் ,புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெறுவர் என்றும் திட்ட அதிகாரிகள் தெரிவித்துளனர்.