மனுக்​களை காகித​மாக பார்க்​காமல், மக்​களின் வாழ்க்​கை​யாக பார்க்க வேண்​டும் – அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்!!

சென்னை:
உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​பட்ட மனுக்​கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்​களின் மீது மேற்​கொள்ளப்​பட்​டு​வரும் நடவடிக்​கைகள் தொடர்​பாக, அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் உயர​தி​காரி​களு​டன் சென்னை தலைமை செயல​கத்​தில் இருந்து காணொலிக் காட்சிவாயி​லாக துணை முதல்​வர் உதயநிதி நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், சிறப்பு திட்ட செய​லாக்​கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத்​துறை செயலர் பெ.அ​முதா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இதில் உதயநிதி பேசிய​தாவது:உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​கள் மூலம் இது​வரை 11.50 லட்​சம் மனுக்​கள் வந்​துள்​ளன. அதே​போல, மகளிர் உரிமைத்​தொகை மனுக்​கள் 17 லட்​சம் வந்துள்ளன.

இந்த மனுக்​களை காகித​மாக பார்க்​காமல், மக்​களின் வாழ்க்​கை​யாக பார்க்க வேண்​டும். முடிந்த அளவுக்கு விரை​வாக தீர்வுகாண வேண்​டும். தீர்​வு​காண இயல​வில்லை எனில் அதன் காரணத்தை முறை​யாக பொது​மக்​களுக்கு தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

எதிர்க்​கட்​சிகள் கண்​டனம்.. திருப்​புவனம் வைகை ஆற்​றில் உங்​களு​டன் ஸ்டா​லின் முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்த நிகழ்​வுக்​கு, எதிர்க்​கட்​சி தலைவர்கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: சிவகங்கை மாவட்​டத்​தில் உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம் மனுக்​கள் வைகை ஆற்​றில் கொட்​டப்​பட்​டிருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

மக்​களின் வலிகளை, உணர்​வு​களை புரிந்து கொள்​ளாமல், அவர்களது கோரிக்​கைகளை நிறைவேற்​று​வது​போல நாடக​மாடும் திமுக அரசுக்கு வரும் 2026 தேர்​தலில் மக்​கள் தகுந்த பாடம் புகட்​டு​வார்​கள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சிவகங்​கை​யில் வைகை ஆற்​றில் அலட்​சி​ய​மாக மனுக்​களை கொட்​டி​யுள்ள சம்​பவம், திமுக ஆட்​சி​யின் அவலநிலைக்​கான சாட்​சி​யாகும்.

பாஜக முன்​னாள் மாநிலத்தலை​வர் அண்​ணா​மலை: திட்​டங்​களுக்கு ஆடம்​பர​மான பெயர்​களை வைப்​பதும், வரி செலுத்​து​வோரின் பணத்தை விளம்​பரத்​துக்​காக வீணாக்​கு​வதும் திமுக அரசின் அடை​யாள​மாக மாறி​விட்​டது.

தற்​போது இதை அம்​பலப்​படுத்​தும் வகை​யில், உங்​களு​டன் ஸ்டா​லின் திட்டமுகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் திருப்​புவனம் வைகை ஆற்​றில் மிதக்​கின்​றன. இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதில் சொல்ல நேரிடும்.

பாமக தலை​வர் அன்​புமணி: அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்​களுக்​கு, திமுக அரசு எந்த அளவுக்கு மரி​யாதை கொடுக்​கிறது என்​ப​தற்கு இதுவே சான்று.

​நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: உங்​களு​டன் ஸ்டா​லின் முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் ஆற்​றில் வீசப்​பட்​டிருப்​பதை பார்த்தாலே, மக்​களுக்​கு எவ்​வளவுமதிப்பு கொடுக்​கிறார்​கள் என்​பதை தெரிந்​து​கொள்​லாம்.

அடுத்த 6 மாதங்​களில் திமுகஆட்சி நிறைவடையப் போகிறது, ஆனால் பிரச்​சினை​கள் அப்படியே இருக்​கின்​றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *