10 -மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை உதவித் தொகைக்காக தேர்வு செய்யும் விஜய்!!

10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை உதவித் தொகைக்காக தேர்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் , தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை உதவித் தொகைக்காக தேர்வு செய்யும் விஜய்; 10 நாட்களுக்குள் மாணவ மாணவிகளை தேர்வு செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பிறந்த நாளுக்கு முன்பாக மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கவும், தேர்தல் முடிந்த உடன் தமிழக வெற்றிக் கழக பணிகளை தீவிரப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *