கோவை, ஈரோடு, சேலம் உள்​ளிட்ட நகரங்​களில் நின்று செல்​லும் வகை​யில் எர்​ணாகுளம்​-பெங்​களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரை​வில் தொடங்​கப்​படும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!!

கோவை:
கோவை, ஈரோடு, சேலம் உள்​ளிட்ட நகரங்​களில் நின்று செல்​லும் வகை​யில் எர்​ணாகுளம்​-பெங்​களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரை​வில் தொடங்​கப்​படும் என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறி​னார்.

‘கோ​யம்​புத்​தூர் சிட்​டிசன்ஸ் போரம்’ அமைப்பு சார்​பில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு கொடிசியா வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற பாராட்டு விழா​வில், அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு பொன்​னாடை அணி​வித்து வாழ்த்​தி​னார்.

இந்​நிகழ்​வில், சக்தி குழு​மத் தலை​வர் மாணிக்​கம், கொடிசியா தலை​வர் கார்த்​தி​கேயன், முன்​னாள் தலை​வர் சுந்​தரம், ‘சீ​மா’ தலை​வர் மிதுன் ராம்​தாஸ், இந்​திய தொழில் வர்த்தக சபை தலை​வர் ராஜேஷ் லுந்த், முன்​னாள் தலை​வர் நந்​தகு​மார், கே.ஜி.குழு​மத் தலை​வர் பால​கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இதில் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: கோவை​யில் உள்ள என்​டிசி நூற்​பாலைகள் பிரச்​சினைக்கு தீர்​வு​காண தொழிற்​சங்க நிர்​வாகி​கள், ஜவுளித் துறை அமைச்​சரை சந்​திக்க உதவினேன்.

கோவை, ஈரோடு, சேலம் உள்​ளிட்ட நகரங்​களில் நின்று செல்​லும் வகை​யில் எர்​ணாகுளம் – பெங்​களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரை​வில் தொடங்​கும். ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் இருந்து கோவைக்கு வரும் தொழிலா​ளர்​களுக்கு உதவும் வகை​யில் ராஞ்சி – கோவை இடையே புதிய ரயில் சேவை​யும் விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது.

நான் ஒரே நேரத்​தில் 3 மாநிலங்​களுக்கு ஆளுந​ராக நியமிக்​கப்​பட்​டேன். மகா​ராஷ்டிரா மாநில ஆளுந​ராகப் பணி​யாற்​றிய நிலை​யில் தற்​போது குடியரசு துணைத் தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளேன். கோவை விமான நிலைய வளர்ச்​சிக்கு நிச்​ச​யம் உதவுவேன். எவ்​வளவு உயரத்​தில் இருந்​தா​லும், உங்களில் ஒரு​வ​னாக இருப்​பேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், முன்​னாள் அமைச்​சர் செ.ம.வேலு​சாமி, அதிமுக எம்​எல்​ஏ-க்​கள் அம்​மன் அர்​சுணன், ஜெய​ராம், தாமோதரன், கந்​த​சாமி, ஏ.கே.செல்​வ​ராஜ், பி.ஆர்​.ஜி.அருண்​கு​மார், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, பாஜக தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன், மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா, திமுக முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

அத்​து​மீறி நுழைந்த இளைஞர்​கள்: தொடர்ந்​து, மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​புள்ள காந்தி சிலைக்கு மாலை அணி​வித்து குடியரசு துணைத் தலை​வர் மரி​யாதை செய்​தார். அவர் வரு​வதற்கு முன்​ன​தாக அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து தடை செய்யப்பட்டிருந்​தது.

திடீரென தடையை மீறி இருசக்கர வாக​னத்​தில் நுழைந்த இரு இளைஞர்​கள், கோஷமெழுப்​பினர். மேலும், போலீ​ஸாரின் பிடி​யில் சிக்​காமல் தப்​பிச் சென்​றனர். இதைக் கண்​டித்து பாஜக​வினர் சாலை மறியலில் ஈடு​பட்ட​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *