வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.4 லட்சம் நிதியுதவி – முதலமை ச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

விருதுநகர்;
விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் சிவகாசி ஆலமரத்தப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இங்கு 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியை துவக்கினர். அப்போது உராய்வு காரணமாக கெமிக்கல் ரூமில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினார்.

இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த அருப்புக்கோட்டை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், ஆவுடையா புரத்தைச் சேர்ந்த சிவகுமார், குருந்த மடத்தைச் சேர்ந்த காமராஜ் , வேல்முருகன், வீரார்பட்டியை சேர்ந்த கண்ணன், செட்டிகுறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இடுபாடுகளில் சிக்கி பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் வழங்கம் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *