தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை இன்று கரம் பிடித்த இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவின்ந்த் !!

சென்னை;
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து, அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவின்ந்த் இன்று கரம் பிடித்தார்.

சென்னையில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

புதுமண தம்பதிகளான அபிஷன் ஜீவின்ந்த்- அகிலாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *