GOAT ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு..!

விஜய் நடிக்கும் ‘THE GREATEST OF ALL TIME’ படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘AGS என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, அஜ்மல் அமீர், லைலா, ஜெயராம், பிரேம்ஜி, மோகன் மற்றும் வைபவ் ரெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா வந்தடைந்தார் நடிகர் விஜய் அவரை மலர் தூவி வரவேற்றனர் கேரள ரசிகர்கள். பின்னர் கடந்த 6 நாட்களாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் கிரீன் ஃபீல்ட் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் கேரளா சூட்டிங்கை முடித்து விட்டு சென்னை திரும்பினார் நடிகர் விஜய். பின்னர் தொடர்ந்து அப்டேட் வேண்டும் எனக் கேட்கும் விஜய் ரசிகர்களுக்கு தன்னுடைய ‘x’ தளத்தில் “அநியாயம் பண்ணாதீங்க அப்டேட் மிக விரைவில் நண்பா நண்பீஸ் ‘GOAT’ திரைப்படத்தின் சிறப்பான அப்டேட் தருகிறேன் என்னை நம்புங்கள்” என பதிவிட்டிருந்தார்.

படத்தின் ஷூட்டிங் கடைசியாக கேரளாவில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி GOAT படத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கிய இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெங்கட் பிரபு தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவேளை இந்தத் தகவலின்படி கிரிக்கெட் விளையாட்டு GOAT படத்தில் இடம்பெறும்பட்சத்தில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. படத்தின் ஷூட்டிங்கில் ரஷ்யாவில் மட்டும் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்தது.

இந்நிலையில் ‘The Greatest Of All Time’ படத்தின் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *